என் உயிர் காவ்யாவுக்கு,
பிரகாஷ் என்றால் ஒளி. காவ்யா என்றால் கவிதை. கவிதை இல்லாத ஒளி வெறும் வெளிச்சம் தான். நீ என் வாழ்க்கைக்குள் வந்த பிறகு தான் என் ஒளிக்கு ஒரு அர்த்தம் கிடைத்தது.
ஆதியோகி முன் தொடங்கிய புத்தாண்டு, ஏரிக்கரை நடைகள், நீரோடையில் உன் குறும்பு, என் பைக்கின் பின் இருக்கையில் உன் சிரிப்பு. இவை தான் என் பொக்கிஷங்கள்.
இந்த பிறந்தநாளில் உனக்கு ஆரோக்கியமும் சந்தோஷமும், நீ கனவு காணும் எல்லாமும் கிடைக்கட்டும். உன் ஒவ்வொரு கனவுக்கும் நான் என்றும் துணையாக இருப்பேன்.
Happy birthday, my love. You are the poem my life was waiting to read.
பிரகாஷ்
